ஜிபிஎஸ் உதவியுடன் 4 மணி நேரம் துரத்தி திருடியவர்களை பிடித்த பைக் உரிமையாளர்..!

பெங்களூருவில் திருடுபோன தனது டியூக் பைக்கை, அதன் உரிமையாளர் ஜி.பி.எஸ். லோகேஷன் வைத்து நான்கே மணி நேரத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தில் வைத்து மீட்டார்.
தஞ்சாவூரை சேர்ந்த ஜெயப்பெருமாள் பெங்களூருவில் கணினி பொறியாளராக பணியாற்றிவருகிறார்.
தனது டியூக் பைக்கை, நண்பர்களோடு தங்கியிருந்த வீட்டின் வெளியே இரவில் நிறுத்தி இருந்தார்.
அந்த பைக்கை ஒவ்வொருமுறை ஸ்டார்ட் செய்யும்போது எஸ்.எம்.எஸ் வரும் வகையில் ஜி.பி.எஸ் கருவி செட் செய்யப்பட்டிருந்ததால் இரவு பலமுறை மெசேஜ் வந்துள்ளது.
காலை தூங்கி எழுந்ததும் மெசேஜை பார்த்து பைக் திருடுபோயிருப்பதை உணர்ந்த ஜெயபெருமாள், ஜி.பி.எஸ் லோகேஷனை டிராக் செய்தபோது 150 கிலோமீட்டருக்கு அப்பால் ஆம்பூர் அடுத்த மின்னூரில் பைக் இருப்பதை கண்டுபிடித்தார்.
நண்பர்களுடன் காரில் புறப்பட்டு மின்னூர் வந்த ஜெயபெருமாள், அப்பகுதி இளைஞர்களின் உதவியோடு பைக்கை மீட்டதுடன் திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
Comments