சாம்சங் டி.விக்குள் புகுந்து டிஸ்பிளேக்கு சங்கு ஊதிய பல்லி.. இதுக்கு மட்டும் கத்துது போல..!

புதுக்கோட்டை அருகே விவசாயி ஒருவர் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய சாம்சங் டிவியின் டிஸ்பிளே 2 வருடத்தில் பழுதான நிலையில், பல்லி எச்சம் போட்டதால், டிவி பழுதாகி இருக்கும் என்று, கடை ஊழியர் கதை சொல்லி சமாளித்த சம்பவம் அரங்கேறி உள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த நாயக்கர் பட்டியை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி விஜயகுமார்.
இவர் தஞ்சையில் உள்ள தனியார் ஹோம் அப்ளையன்ஸ் கடையில் 40 ஆயிரம் ரூபாய் செலுத்தி 2019 அக்டோபர் மாதம் 26ம் தேதி சாம்சங் எல்.இ.டி தொலைக்காட்சி ஒன்றை வாங்கியுள்ளார்
அந்த தொலைக்காட்சி பெட்டிக்கு இரண்டு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்பட்டது
இந்த நிலையில் வாரண்டி முடிந்த 3 மாதங்களில், அந்த தொலைக்காட்சி பழுதடைந்துள்ளது. தொலைக்காட்சியில் காட்சிகள் இரண்டு இரண்டாக தெரிந்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தில் கேட்டபோது இரண்டு ஆண்டுகள் வாரண்டி முடிவடைந்து விட்டது. இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது கூறியதோடு, தொலைக்காட்சியை நேரில் சென்று ஆய்வு செய்த பின்புதான், பழுது சரி செய்ய முடியும் என்று கூறியுள்ளார்கள்.
விஜயகுமார் வீட்டிற்கு சென்று டிவியை பார்த்து விட்டு, இதனை சரி செய்ய வேண்டுமென்றால் அதிக பணம் செலவாகும் என்றும் கூறிச்சென்றுள்ளனர்.
இதையடுத்து விஜயகுமார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொலைக்காட்சி விற்ற கடையில் கேட்டுள்ளார் . பல்லி சிறுநீர் கழித்ததால் தொலைக்காட்சி பெட்டி பழுதடைந்ததாகவும், இந்த டி.வி மட்டுமல்ல எந்த டிவியாக இருந்தாலும் பல்லி எச்சம் பட்டால் காலியாகிவிடும் என்றும் கூறியுள்ளனர்.
பல்லி சிறுநீர் கழித்ததால் தொலைக்காட்சியை பழுதுபார்க்க இயலாது என்றும், பல்லி வராமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
இதனால் நொந்து போன விஜயகுமார், பல்லி இல்லாத இடத்தில் தொலைக்காட்சியை அமைத்துக்கொள்ளுங்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வீடியோ வெளியிட்டுள்ளார்
Comments