கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 2 பேர் கைது.!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த வட மாநிலத்தொழிலாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
வெப்படை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள நூற்பாலைகளில் வட மாநிலத்தொழிலாளர்கள் 60,000 பேர் பணியாற்றி வருகின்றனர். நூற்பாலை ஒன்றில் தங்கி பணியாற்றிவந்த பீகாரை சேர்ந்த மனிஷ் குமாரையும், சத்தீஸ்கரை சேர்ந்த சதார் பஸ்வானையும், ரகசியத் தகவலின்பேரில் போலீசார் சோதனையிட்டபோது, ஒரு நாட்டு துப்பாக்கியும், 8 தோட்டாக்களும் சிக்கின.
விசாரணையில், இருவரும் 7 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் தங்கியதும், முகவரியை தமிழகத்திற்கு மாற்றியதோடு, சத்தீஸ்கரில் இருந்து கொண்டுவந்த நாட்டு துப்பாக்கியை காட்டி, சக வடமாநில தொழிலாளர்களிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும் சில வடமாநில இளைஞர்கள் கள்ளத்துப்பாக்கி வைத்துள்ளதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்
Comments