மருமகனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மாமனார்

கர்நாடக மாநிலம் பாகல்கோட் அருகே மகள் வேறொரு பிரிவைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த மாமனார் மருமகனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
டக்கோடா கிராமத்தைச் சேர்ந்த தம்மன்ன கவுடா பாட்டில் என்பவரின் மகள் பாக்யஸ்ரீ சில மாதங்களுக்கு முன்பு தந்தையின் எதிர்ப்பை மீறி ஜெயின் சமூகத்தை சேர்ந்த புஜபலி கர்ஜிகி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாமனார் மற்றும் அவரது கூட்டாளிகள் 2பேர் கடந்த சனிக்கிழமை அன்று நள்ளிரவில் தனியாக சென்ற புஜபலியை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தம்மன்ன கவுடா போலீசில் சரண் அடைந்தார். மேலும் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Comments