வீசப்பட்ட ஒத்த செருப்பை வாயில் கவ்விக்கொண்டு தப்பி ஓடிய பாம்பு..! பரபரப்பு காட்சிகள்

0 2550

வட மாநிலம் ஒன்றில் வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பு மீது செருப்பை வீசி எறிந்து பெண்கள் விரட்ட முயல, அந்த பாம்பு செருப்பை கவ்விக்கொண்டு சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

அங்குள்ள புதர் பகுதியில் இருந்து நீளமான பாம்பு ஒன்று வீட்டுக்குள் நுழைய முயன்றதும், அதை விரட்டும் வகையில் ஒற்றை கால் செருப்பை எடுத்து ஒரு பெண் வீசினார். அதனை எலி என நினைத்து கவ்விப்பிடித்த பாம்பு, அதனை வாயில் கவ்வி தூக்கியபடி ஊர்ந்து சென்று புதருக்குள் பதுங்கிக் கொண்டது.

இந்த வீடியோ எங்கு? எப்போது? எடுக்க பட்டது என்ற விவரம் இன்றி சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments