மங்களூரில் ஆட்டோ வெடி விபத்தில் கோவைக்கும் தொடர்பு - கர்நாடக டிஜிபி தகவல்..!

மங்களூருவில் ஆட்டோவில் வெடி விபத்து ஏற்பட்ட நிகழ்வோடு கோவைக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக டி.ஜி.பி. பிரவீன் சூட் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும், கடந்த சில மாதங்களில் கோவை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு அவர் பயணித்ததாகவும் கூறினார்.
இதனிடையே, அந்நபர் கோவையில் போலியான விவரங்கள் வழங்கி சிம் கார்டு வாங்கியுள்ளதாகவும், அவர் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ததை அவரது செல்போன் சிக்னல் காட்டுவதாகவும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
Comments