குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருடன் பயணிப்பவர்களுக்கும் அபராதம் - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்..!

குடிபோதையில் வாகனம் ஓட்ட ஓட்டுநர்களை அனுமதிப்பது, அவர்களை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும் என்பதாலேயே, போதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து பேட்டியளித்த அவர், ஏற்கனவே இது தொடர்பாக போக்குவரத்து விதிகளில் பிரிவுகள் உள்ளதாகவும், தற்போது அதனை தீவிரமாக நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் கூறினார்.
Comments