சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி தீ வைத்து எரித்த பயங்கரவாதிகள் - 19 பேர் உடல் கருகி பலி..!

சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி தீ வைத்து எரித்த பயங்கரவாதிகள் - 19 பேர் உடல் கருகி பலி..!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில், அல் கொய்தா ஆதரவு பெற்ற அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சாலையில் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி தீ வைத்ததில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
பெலெட்வேய்ன் மற்றும் மாக்சாஸ் நகரங்களுக்கு இடையேயான சாலையில் வாகனங்கள் பல சென்று கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் வாகனங்களை தடுத்து நிறுத்தி தீ வைத்துவிட்டு தப்பி ஓடினர்.
இதில் 8 வாகனங்கள் முழுவதுமாக தீயில் கருகி உருக்குலைந்து போயின. பலர் தீக்காயம் அடைந்த நிலையில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
Comments