நண்பனை கொலை செய்தவர்களை, பழிக்கு பழியாக கொலை செய்வதற்கு ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 12 பேர் கைது

மதுரையில் நண்பனை கொலை செய்தவர்களை, பழிக்கு பழியாக கொலை செய்வதற்கு ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 12 பேரை போலீசார் கைது செயது சிறையில் அடைத்தனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற கள்ளழகர் திருவிழாவின் போது கோஷ்டி மோதலில் ஆனந்தகுமார் என்பவர் வெட்டி கொலைசெய்யப்பட்டார்.இதில் கைதானவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.
7 பேர் மட்டும் ஜாமினில் வெளிவந்து தெற்கு வாசல் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். இதனை அறிந்த ஆனந்தகுமாரின் நண்பர்கள் 12 பேர் , எதிரணியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கையெழுத்திட வரும்போது கொலை செய்ய ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தனர்.
தகவல் அறிந்த தனிப்படை போலீசார் விரைந்து சென்று 12 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்
Comments