கப்பலை அகதிகள் தங்குமிடமாக மாற்றும் இங்கிலாந்து..!

0 1021

அகதிகளாக வருவோரை தங்க வைப்பதற்காக, கைவிடப்பட்ட கப்பலை தங்குமிடமாக மாற்றும் பணியில் இங்கிலாந்து அரசு ஈடுபட்டு வருகிறது.

பிப்பி ஸ்டாக்ஹோம் எனப்படும் கப்பல், ஹெல்ஃபோர்ட் நதி மற்றும் ஃபால் நதியின் முகத்துவாரங்களை பிரிக்கும் ஃபால்மவுத் விரிகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிறிய படகுகளில் நாட்டிற்குள் அடைக்கலம் தேடி தனித்து வரும் 500 ஆண்களை இந்த கப்பலில் தங்க வைக்கும் வகையில் அறைகள், சுகாதார வசதி, உணவு வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்,  சரியான தங்கும் வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், இது மனித உரிமை மீறலாகும் எனவும் பிரதமர் ரிஷிசுனக்கின் சொந்த கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் சில எம்.பி.க்களே விமர்சனம் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments