மும்பை பேருந்துகளில் செல்போன் லவுட் ஸ்பீக்கரில் சத்தமாக பாடல் கேட்டால் சிறைத் தண்டனை..!

0 1091

பிரசித்த பெற்ற ஷீரடி சாய்பாபா கோயில் வரும் காலவரையின்றி மூடப்படுவதாக வெளியான தகவலை கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சாய்பாபா ஆலயத்தின் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த கோயில் அறக்கட்டளை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனால், மே 1-ம் தேதி முதல் கோயில் காலவரையின்றி மூடப்படும் என்ற தகவல் பரவியது. 

இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள அறக்கட்டளை நிர்வாகம், கோயில் தொடர்ந்து திறந்திருக்கும் என்றும் வழக்கமான ஆரத்தி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ஷீரடி சாய்பாபா அறக்கட்டளைக்கு உட்பட்ட மருத்துவமனை உள்ளிட்ட அனைத்தும் வழக்கம் போல செயல்படும் எனவும் நிர்வாகம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments