உலகளாவிய மருத்துவ சேவை மையமாக சென்னை திகழ்கிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி

உலகளாவிய மருத்துவ சேவை மையமாக சென்னை திகழ்ந்து வருவதாக ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற அப்பல்லோ மருத்துவமனையின் மரபியல் நிறுவன தொடக்க விழாவில் பங்கேற்ற ஆளுநர், ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு மருத்துவத்திற்காக நாம் அவர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்குமென கருதினார்கள்.
ஆனால், கொரோனா பெருந்தொற்று காலத்தில், இந்தியாவே சுயமாக தடுப்பூசி தயாரித்ததோடு, 150க்கும் அதிகமான நாடுகளுக்கும் வழங்கியதாக ஆளுநர் தெரிவித்தார்.
மேலும், பிறருக்கு கொடுப்பது நம் நாட்டின் மரபணுவிலேயே கலந்திருப்பதாகவும் ஆளுநர் கூறினார். நிகழ்ச்சியில், அப்பல்லோ குழுமத்தலைவர் பிரதாப் சி ரெட்டி, நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி, அப்பல்லோ துணைத் தலைவர் பிரித்தா ரெட்டி கலந்து கொண்டனர்.
Comments