போலீசாரைத் தாக்கியதாக ஒய்.எஸ்.ஆர்.டி கட்சி தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா கைது..!

ஐதராபாத்தில், காவல் துறையினரை தாக்கியதாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா கைது செய்யப்பட்டார்.
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்திற்கு ஷர்மிளா செல்ல உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அவரை அங்கு செல்ல விடாமல் வீட்டிலேயே தடுக்க முயன்றதால் போலீசாருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், போலீசாரை தாக்கியதாகக் கூறி ஷர்மிளா கைது செய்யப்பட்டு ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார்.
அங்கு அவரை பார்க்க வந்த அவரது தாயார் ஒய்.எஸ்.விஜயம்மாவிற்கும் காவல் துறையினருக்கும் இடையேவும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Comments