இடிந்து விழுந்த 4 மாடிக் கட்டடம்.. குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் கட்டடங்களை ஆய்வு செய்ய வேண்டும் - கட்டுமான பொறியாளர் சங்கத்தினர்

0 1331

சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் 70 ஆண்டுகள் பழமையான நான்கு மாடிக்கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தினர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தலைவர் சீனிவாசன், கட்டடம் வயது அதிகரிக்கும் போது குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் structural audit என்ற ஆய்வு செய்து கட்டுமான உறுதித்தன்மை சான்று வழங்கும் முறையை சென்னையிலும் கடைபிடிக்க வேண்டுமென தெரிவித்தார்.

கட்டடத்தில் எந்த இடங்கள் வலுவற்று இருக்கின்றன, புதுப்பிக்க ஏற்ற கட்டடமா உள்ளிட்ட பரிசோதனைகளும் ஆய்வுகளும் முன்கூட்டியே செய்திருக்க வேண்டுமென பொறியாளர் கார்த்திகேயன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments