ஏப்.6ம் தேதி, விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்.. சீன கடலில் 350 அடி ஆழத்தில் கண்டுபிடிப்பு..!

0 1692

பத்து நாட்களுக்கு முன் மாயமான ஜப்பான் நாட்டு ராணுவ ஹெலிகாப்டரின் பாகங்களும், பயணிகள் 5 பேரின் உடல்களும் கிழக்கு சீன கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறாம் தேதி, மூத்த ராணுவத் தளபதிகள் 2 பேர் உள்பட 10 பேர் சென்ற பிளாக் ஹாக் ஹெலிகாப்டர், மியாக்கோ தீவு அருகே கட்டுப்பாடு அறை உடனான தொடர்பை இழந்து, ரேடாரிலிருந்து மறைந்தது.

மாயமான ஹெலிகாப்டரை கடலுக்கடியில் தேடிவந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், 350 அடி ஆழத்தில், ஹெலிகாப்டரில் பயணிகள் அமரும் பகுதியை கண்டுபிடித்தனர். அதில் பயணித்த 10 பேரில் 5 பேரின் உடல்கள் உள்ளே இருந்துள்ளன. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments