சென்னையில் அமலுக்கு வந்தது "சிங்கார சென்னை அட்டை" என்ற பெயரில் தேசிய பொது இயக்க அட்டை..!

மெட்ரோ, மாநகர பேருந்து, புறநகர் ரயில் என மூன்று போக்குவரத்திலும் பயணிக்கும் வகையிலான தேசிய பொது இயக்க அட்டை, ”சிங்கார சென்னை அட்டை" என்ற பெயரில் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற அமைச்சகம் அறிமுகப்படுத்திய இந்த அட்டையை சுங்கச்சாவடி, வாகன நிறுத்துமிட கட்டணம், வங்கி பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்த முடியும்.
இந்த தேசிய பொது இயக்க அட்டை பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் பயன்பாட்டில் உள்ள நிலையில், சென்னையில் முதற்கட்டமாக மெட்ரோ ரயிலில் மட்டும் பயணிக்க கூடிய வகையில், தேசிய பொது இயக்க அட்டையை "சிங்கார சென்னை அட்டை" என்ற பெயரில் சென்னை மெட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அடுத்த 9 மாதங்களில் இந்த அட்டை மூலம் சென்னை மாநகர பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களிலும் பயணிக்க கூடிய வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments