'ஜூன் முதல் அல்லது 2வது வாரத்தில், 'என் மண்... என் மக்கள் 'எனும் பெயரில் ஊழலை எதிர்த்து நடைபயணம்' - அண்ணாமலை..!

'என் மண், என் மக்கள்' என்னும் பெயரில் ஊழலை எதிர்த்து பாஜக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், ஜூன் மாதத்தின் முதல் அல்லது 2வது வாரத்தில் தனது நடைபயணம் தொடங்கும் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சென்னை பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மணல் லாரி, தண்ணீர் லாரி பயத்தையெல்லாம் தன்னிடம் காட்ட முடியாது என்றும் கூடுதலாக பாதுகாப்பு வாங்கி வைத்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், மின்சாரத்தை தொட்டு விட்டதால், இனி அதனை விட முடியாது என கூறிய அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஊழல் பட்டியலின் பார்ட் - 4 வரை வெளியிடுவேன் என்றும் அதில் வேறு வேறு கட்சிகளும் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.
Comments