ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கியது கடல்..!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியுள்ளது.
பாம்பன் அடுத்த சின்னப்பாலம், தோப்புகாடு உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமான அளவு கடல் உள்வாங்கியுள்ளதால் அரியவகை பவளப்பாறைகள், நட்சத்திரமீன்கள், கடல் அட்டைகள் வெளியில் தெரிந்தன.
இதனால் கடற்கரை ஓரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி சேதமடைந்த நிலையில், மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலும் இன்று இரண்டாவது நாளாக கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
Comments