பாலி கடற்கரையில் மீண்டும் ஒரு திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது..!

இந்தோனேஷியாவின் பாலி கடற்கரையில் இறந்த நிலையில் 17 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய ஆண் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது.
பாலி கடற்கரையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் இதுவரை 3 மிகப்பெரிய திமிங்கலங்கள் இறந்தநிலையில் கரை ஒதுங்கியுள்ளன. திமிங்கலம் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை எனக் கூறப்படும் நிலையில், உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டு திமிங்கலம் புதைக்கப்பட உள்ளது.
தொடர்ந்து திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கி வருவது அப்பகுதி கடலில் ஏதோ விபரீதம் இருப்பதை காட்டுவதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Comments