இன்னாமா பாப்பா வயசு.. இப்படி பண்ணிட்டியே.. இறந்த இன்ஸ்டா ரீல்ஸ் பறவை.. 9 வயது சிறுமியின் விபரீத முடிவு..!

0 5713

திருவள்ளூரில், இன்ஸ்டாகிராம்  ரீல்ஸில் வீடியோ வெளியிட்டு பிரபலமான 9 வயது சிறுமி வீட்டில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

வயசு ஒன்பது தான் ஆகுது ... தன்னுடைய க்யூட் எக்ஸ்பிரசன்ஸ் நடனத்திறமையால் இன்ஸ்டா ரீல்ஸில் பிரபலமாக இருந்தவர் சிறுமி பிரதிஷா..!

 

திருவள்ளூர் பெரியகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- கற்பகம் தம்பதியினரின் மகளான பிரதிக்ஷா திருவள்ளூர் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி பிரதிக்ஷா இன்ஸ்டாவில் தனக்கென ஒரு ஐடியை கிரியேட் செய்து அதில் 50க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு ரீல்ஸ் வீடியோ பதிவிட்டதால் அந்தப் பகுதியில் இன்ஸ்டா குயின் சிறுமியாக அழைக்கப்பட்டார்

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சுமார் 8 மணி அளவில் சிறுமி பிரதிக்ஷா தனது பாட்டி வீட்டின் எதிரில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அங்கு வந்த அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தியும், தாய் கற்பகமும் விளையாடியது போதும் வீட்டிற்கு சென்று படிக்கும்படி தோழிகள் முன்பு கண்டித்துவிட்டு, வீட்டின் சாவியை சிறுமி பிரதிக்ஷாவிடம் கொடுத்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றதாக கூறப்படுகின்றது.

1 மணி நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பிய பெற்றோர் வீட்டின் கதவை பலமுறை தட்டியும், சிறுமி பிரதிக்ஷாவின் பெயரை கூறி அழைத்துப் பார்த்தும் கதவை திறக்காததால் பயந்து போன தந்தை கிருஷ்ணமூர்த்தி படுக்கை அறை ஜன்னல் கதவை உடைத்து பார்த்தபோது சிறுமி வெள்ளை நிற சிறிய துண்டால் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

மேல் புறம் வழியாக வீட்டிற்குள் இறங்கி படுக்கை அறை கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று சிறுமியை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதாகவும், அங்கு மருத்துவர்கள் 1 மணி நேரத்துக்கும் மேலாக குழந்தைக்கு உயிர் காக்கும் சிகிச்சைகளை அளித்தும் பலனளிக்காமல் சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தந்தை கிருஷ்ணமூர்த்தி திருவள்ளூர் நகர போலீசாரிடம் புகார் அளித்தார்

9 வயது சிறுமி எப்படி தற்கொலை செய்து கொள்ள இயலும் ? என்ற சந்தேகத்தில் நேரடியாக வீட்டிற்கே சென்று போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். வீட்டின் படுக்கை அறையில் உள்ள கட்டில் மெத்தையின் மீது சிறிய ஸ்டூல் போட்டு, அதன் மீது ஏறி துண்டால் ஜன்னலில் கட்டி தூக்கிட்டு சிறுமி கீழே குதித்ததாகவும், அந்த துண்டு கழுத்தை முழுவதும் நெருக்காததால் தூக்கில் தொங்கிய படியே 1 மணி நேரத்துக்கும் மேலாக சிறுமி உயிருக்கு போராடி உள்ளார் என்றும் தெரிவித்த போலீசார் தந்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உடலில் உயிர் இருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக அவரை காப்பாற்ற இயலாமல் போனதாக தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments