காரைக்குடி அருகே மார்பளவு பெரியார் சிலை அகற்றப்பட்ட விவகாரம்: டிஎஸ்பி, வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்து உயரதிகாரிகள் உத்தரவு!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மார்பளவு பெரியார் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
திராவிட கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் ஸ்ரீராம் நகரில் புதிதாக வீடு கட்டி குடியேறினார். வீட்டின் சுற்றுச்சுவர் முன் பகுதியில் இருந்த பெரியாரின் மார்பளவு சிலையை வருவாய்த் துறையினர் தேவகோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் துணையோடு சென்று அகற்றினர்.
இதற்கு திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் உருவாகி பதற்றம் ஏற்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்தி, துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தென் மண்டல ஐஜி உத்தரவிட்டுள்ளார். இதே போன்று வட்டாட்சியர் கண்ணனை சிவகங்கை திட்ட வன அலுவலராக மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
Comments