வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை

0 2190

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

சூரைக்காற்றில் படகுகள் சேதமடையாமல் இருக்க பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகள் துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் புதுச்சேரியிலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments