முகப்பு
தண்ணீர் பாட்டில் வாங்க, பேருந்தில் இருந்து பயணி கீழே இறங்கியதில் ஏற்பட்ட தகராறு.. ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் தாக்கியதில் கணவன்-மனைவி காயம்
Jun 10, 2025 05:51 AM
656
ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் தாக்கியதில் கணவன்-மனைவி காயம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஸ்ரீ எஸ்.எம்.எஸ் ஆம்னி பேருந்தில் ஓட்டுநர்கள் தாக்கியதில் அதில் பயணித்த தம்பதியர் காயமடைந்தனர்.
கோயம்பேட்டிலிருந்து நாகர்கோவில் புறப்பட்ட பேருந்தில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் ஏறி உள்ளனர். கிளாம்பாக்கத்தில் நின்ற போது ஓட்டுநரிடம் கூறி விட்டு தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக செல்வன் என்பவர் கீழே இறங்கி உள்ளார்.
அவர் வருவதற்குள் பேருந்தை இயக்கிய நிலையில், ஆட்டோ பிடித்து ஊரப்பாக்கத்தில் வந்து ஏறியதால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர், பேருந்து விக்கிரவாண்டியில் நின்ற போது மற்ற ஓட்டுநர்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தியதால் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர் விசாரணை நடத்தினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!
Jun 22, 2025
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu