முகப்பு
"ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி பெறுவதில் ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு" - அன்புமணி குற்றஞ்சாட்டு
Jun 10, 2025 07:18 AM
42
"ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி பெறுவதில் ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு"
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி பெறுவதில் ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு, மாநில உரிமையை காப்பதில் படு தோல்வி அடைந்துள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய 2,151 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க மறுப்பதற்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரிய தமிழ்நாடு அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு முதலே நிதி வராத நிலையில், கடந்த மே மாதம் வழக்குத் தொடரப்பட்டதாக தமிழக அரசு பதிலளித்ததால், வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுக்கப்பட்டதாக அன்புமணி கூறினார்.
ஆகஸ்ட் மாதத்திலேயே தமிழக அரசின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தால் அடுத்த சில மாதங்களில் தீர்ப்பு வந்திருக்கும் என தெரிவித்த அன்புமணி, மக்கள் நலனை விட அரசியல் லாபம் தேடுவதில் தான் திமுக அரசு தீவிரம் காட்டியதாக விமர்சித்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu