தனியாக சென்ற பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்த பி.காம் பட்டதாரி இளைஞர் கைது.!

0 4301

சென்னையில், தனியாக சென்ற பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்த பி.காம் பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ஆழ்வார்பேட்டை வழியாக கல்லூரிக்கு சைக்களில் சென்ற மாணவியை பின்தொடர்ந்து சென்ற இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினார்.

மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார், இருசக்கர வாகன எண்ணை வைத்து கோட்டூர்புரத்தை சேர்ந்த தனுஷ் என்ற 25 வயது இளைஞரை கைது செய்தனர்.

தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றும் தனுஷ், கடந்த சில நாட்களில் மட்டும் தனியாக சென்ற 25க்கும் மேற்பட்ட பெண்களிடம் பேச்சு கொடுத்தபடியே பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

வெளியே சொல்ல அவமானப்பட்டு பல பெண்கள் புகாரளிக்கத் தயங்கிய நிலையில், துணிவுடன் புகாரளிக்க முன்வந்த கல்லூரி மாணவிக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். தனது சபலத்தால், 10 மாத கைக்குழந்தையுடன் காதல் மனைவியை தவிக்கவிட்டுவிட்டு தனுஷ் சிறை சென்றுள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments