தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
வருகின்ற 25ம் தேதி 17 மாவட்டங்களிலும், 26ம் தேதி 21 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம், கணித்துள்ளது. மேலும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.
Comments