சென்னையில் ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை..
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் இன்று துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார். மதியம் 12.20 மணியளவில் கழிவறைக்கு சென்ற அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மார்பில் சுட்டுக்கொண்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த இதர காவலர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் செந்தில் குமார் உயிரிழந்தார். தற்கொலை செய்துக்கொண்ட செந்தில் குமார் மதுரையை சேர்ந்தவர் என்றும், அவருக்கு மனைவியும், ஒரு வயது குழந்தையும் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலைசெய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Comments