கார்கிவ் விமான நிலையத்திற்கு அருகே ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல்.!

0 2351

உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு அருகே குடியிருப்பு பகுதியில் ரஷ்ய படைகள் குண்டு வீசி நிகழ்த்திய தாக்குதலில், பள்ளி ஒன்றில் தீப்பற்றியதோடு அருகிலிருந்த கட்டிடங்களும் சேதமடைந்தன.

கார்கிவ் விமான நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிற்குள்ளாக இந்த தாக்குதலானது நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் அங்கிருந்த பள்ளிக் கட்டிடத்தில் தீப்பற்றிய நிலையில், அருகிலிருந்த குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவியுள்ளது.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் 2 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments