இலகு ரக தனியார் விமானம் தரையில் விழுந்து விபத்து ; 4 பேர் படுகாயம்

இலகு ரக தனியார் விமானம் தரையில் விழுந்து விபத்து
பொலிவியாவில் இலகு ரக தனியார் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சி-402 வகை சிறிய விமானம் என்ஜினில் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட போது விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்ஜின் கோளாறால் அருகில் இருந்த விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்க விமானம் கட்டுப்பாட்டை இழந்து சமவெளியில் விழுந்தது. விமானத்தில் பயணித்த நான்கு பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments