பண மோசடி செய்த வழக்கு ; முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்களிடம் போலீஸார் விசாரணை

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்களிடம் போலீஸார் விசாரணை
அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி, 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில்,ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அவரது சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன் மற்றும் கார் ஓட்டுநர் ராஜ்குமார் ஆகியோரை, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
Comments