அரசு பேருந்தை மறித்து நடிகை தரமான சம்பவம் புட்போர்டு மாணவர்களை ஓடவிட்டார்..! இப்ப அவரை போலீஸ் தேடுகிறதாம்..!

0 6794

சென்னை குன்றத்தூரில் அரசு பேருந்தின் கூறையிலும், படிக்கட்டிலும் தொங்கிக் கொண்டு சென்ற மாணவர்களை தனது செல்போனில் படம் பிடித்த நடிகை ஒருவர் , தன்னை போலீஸ் எனக்கூறி ஓட்டுனர் மற்றும் நடத்துனரை எச்சரித்ததுடன் மாணவர்களை சட்டையை பிடித்து இழுத்து அடித்து ஓடவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கிச்சென்ற பள்ளி மாணவர்களை சட்டையை பிடித்து அடித்து விரட்டும் இவர் பெண் காவலர் என்று நினைத்து விடாதீர்கள்..! அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த குணச்சித்திர நடிகை ரஞ்சனா நாச்சியார் ..!

போரூரிலிருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய படியும் பஸ்சின் கூரை மீது ஏறி நின்றபடியும் பயணம் செய்தனர் இதனை பின்னால் காரில் வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் படம் பிடித்தபடியே வந்தார்.

கெருகம்பாக்கம் அருகே பேருந்தை மறித்த ரஞ்சனா, பேருந்து ஓட்டுரை கடுமையாக திட்டினார்

சொல்பேச்சு கேட்க மறுப்பதாக ஓட்டுனர் கூறியதால் ஆவேசமாக சென்ற அவர் முன்பக்க படிக்கட்டுகளில் நின்ற மாணவர்களை அதட்டி வெளியேற்றினார்

பின்பக்க படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை கையால் அடித்து விரட்டி விட்டார் ரஞ்சனா நாச்சியார்

ஒரு மாணவர் கூட்டத்துக்குள் புகுந்து கொண்ட நிலையில் அவரை வலுகட்டாயமாக சட்டையை பிடித்து இழுத்து சரமாரியாக கையால் தாக்கி திட்டி ஓடவிட்டார்

மாணவர்கள் படியில் தொங்குவதை கண்டுகொள்ளாமல் இருக்கையில் அமர்ந்து டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த நடத்துரனரையும் வசைமாறி பொழிந்தார்

பேருந்தில் இருந்த பயணிகளிடம் அவர் தன்னை போலீஸ் எனக்கூறியதால் ரஞ்சனா நாச்சியாருக்கு எதிராக எவரும் வாய் திறக்கவில்லை.

ரஞ்சனா நாச்சியார் மாணவர்களை படியில் தொங்க கூடாது என்று எச்சரித்தது சரி என்றாலும் அவர் மாணவர்களிடம் நடந்து கொண்ட விதம் தவறு என்று சுட்டிக்காட்டும் போலீசார் அவரை அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments