மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து உயிரிழப்பு அதிர்ச்சியில் தந்தையும் பலி

0 1851

உளுந்தூர்பேட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அப்பெண்ணின் தந்தையும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் நத்தாமூர் கிராமத்தில் திராவியம் என்பவர் தனது இரு குழந்தைககளுடன் தந்தை வீட்டில் இருந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட திராவியத்தையும் குழந்தைகளையும் கணவர் அவ்வப்போது பார்த்துச் செல்வார் என்று கூறப்படுகிறது.

குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக திராவியம் அவ்வப்போது கூறிவந்ததை, அவர் மனநலம் பாதிக்கபட்டவர் என்பதால் யாரும் பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு திராவியம் தனது உடலில் தீவைத்து குழந்தைகளையும் கட்டிப்பிடித்துக்கொண்டார். குழந்தைகளின் அலறலை கேட்டு திராவியத்தின் தந்தை பொன்னுரங்கன் உள்ளிட்ட குடும்பத்தார் கதறினர்.

அப்போது, பொன்னுரங்கன் அந்த இடத்திலேயே விழுந்து அதிர்ச்சியில் உயிரிழந்தார். திராவியம் மற்றும் அவரது மகள்கள் இருவரும் தீயில் கருகி பலியாயினர்.

காப்பாற்ற முயன்ற அப்பெண்ணின் சகோதரர் விஜயகுமார், மற்றொரு சகோதரரின் மகன் ஆகிய 2 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments