ஒன்றிய அமைச்சர் எனக் குறிப்பிட்டதால் நவாஸ் அணிக்கு கடும் எதிர்ப்பு.. பாஜக தொண்டர்களின் எதிர்ப்பு கோஷத்தால் பாதியில் பேச்சை நிறுத்திய எம்.பி.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அமைச்சர் பங்கேற்ற மீனவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய எம்.பி. நவாஸ்கனி ஒன்றிய அமைச்சர் என குறிப்பிட்டதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் பேச்சை பாதியில் முடித்து கொண்டார்.
சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் துறைமுகத்தில் நடைபெற்ற மீனவர்களுடைய கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா மற்றும் இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வந்திருந்தனர். வரவேற்புரை ஆற்றிய தொகுதி எம்பி நவாஸ்கனி மத்திய அமைச்சரை ஒன்றிய அமைச்சர் என குறிப்பிட்டு பேசினார்.
அப்போது அங்கு கூடியிருந்த பாஜகவினர் கடும் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் பாதியிலேயே தனது பேச்சை நிறுத்தி கொண்டார். பின்னர் பேசிய இணை அமைச்சர் எல். முருகனும் அதே கருத்தை வலியுறுத்தியதால் நவாஸ்கனிக்கு எதிராக பாஜகவினர் கூச்சலிட்டனர். இதையறிந்த மத்தியஅமைச்சர் பர்சோத்தம் ரூபாலா தனது காரிலேயே நவாஸ் கனியை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
Comments