கடல் விறால்களைப் பிடிக்கத் தூண்டில் வீசிய மீனவர்.. படகு மீது பல முறை வந்து மோதிய 'புல்' சுறா.. !!

0 1259

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் அருகே கடலில் சென்ற படகு மீது சுறாமீன் ஒன்று மீண்டும் மீண்டும் வந்து ஆவேசமாக மோதியது.

கடற்கரையில் இருந்தபடி கடற்பரப்பில் டிரோன் கேமராவை பறக்க விட்ட யூடியூப் பிரபலம் ஒருவர், 2 கடல் விறால் மீன்கள் நீந்தி செல்வதை கவனித்தார்.

அவற்றை பிடித்துவருமாறு படகிலிருந்த தனது நண்பனுக்கு கரையிலிருந்தபடி தகவல் அளித்தார். அந்த நண்பர் தூண்டிலை வீசியபோது திடீரென வெளிப்பட்ட புல் சுறா, படகின் பின்புறத்திலிருந்த எஞ்சின் மீது பல முறை வந்து பலமாக மோதியது.

எஞ்சின் பழுதடைவதற்குள் அந்த நபர் வேகமாக படகை திருப்பிக்கொண்டு கரைக்கு திரும்பினார். சுறா மோதியதில் படகின் எஞ்சின் பலத்த சேதமடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments