'கூட்டுறவு சந்தை' செயலி அறிமுகம்... முதற்கட்டமாக 64 பொருட்கள் செயலி மூலம் விற்பனை - அமைச்சர் பெரியகருப்பன்..!

0 3060

தமிழ்நாடு அரசு சார்பில் இயங்கி வரும் கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்த கூட்டுறவு சந்தை என்ற பெயரில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் Co-OP BAZAAR என்ற பெயரில் அறிமுகமாகி உள்ள இந்த செயலியை சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்த பின் பேட்டியளித்த அமைச்சர் பெரிய கருப்பன், இந்த செயலி மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான மளிகை, வீட்டு உபயோக பொருட்களை ஆர்டர் செய்தால், இருப்பிடங்களுக்கே டோர் டெலிவரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முதற்கட்டமாக இதில் 64 பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நியாயவிலைக் கடைகளில் விற்கப்படும் தக்காளி விலையை மேலும் குறைப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments