குறுகிய பார்வை கொண்டோரால் நாட்டில் நடக்கும் நல்லவைகளை பார்க்க முடியவில்லை - பிரதமர் மோடி

எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால், அரசியல் நலன்களைத் தாண்டி சிந்திக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
நவீன உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில், தமது அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், குறுகிய பார்வை கொண்ட சிலரால் நாட்டில் நடக்கும் நல்லவைகளை பார்க்க முடியவில்லை என்றார்.
போதுமான மருத்துவக் கல்லூரிகள் முன்பே கட்டப்படிருந்தால், தற்போது மருத்துவர்களின் பற்றாக்குறையை சந்திக்க வேண்டிய இருந்திருக்காது என்றும், ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் கிடைப்பதை முன்பே உறுதி செய்திருந்தால், மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ஜல் ஜீவன் திட்டத்தை தாம் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
Comments