திரைப்பட இயக்குனரும், பிரபல காமெடி நடிகருமான மனோபாலா காலமானார்..!

0 9115

இயக்குனர் மனோபாலா காலமானார்

திரைப்பட இயக்குனரும், பிரபல காமெடி நடிகருமான மனோபாலா (69) காலமானார்

கல்லீரல் பிரச்சினைக்கு சிகிச்சை எடுத்துவந்த நிலையில் உயிரிழப்பு எனத் தகவல்

சென்னையில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் காலமானதாக தகவல்

இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர், ரஜினி நடித்த ஊர்க்காவலன் படத்தை இயக்கியுள்ளார்

ரஜினியின் ஊர்க்காவலன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் மனோபாலா

பிள்ளை நிலா, சிறைபறவை, மூடு மந்திரம், கருப்பு வெள்ளை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் மனோபாலா

அரண்மனை, துப்பாக்கி, கலகலப்பு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் மனோபாலா

சதுரங்க வேட்டை உள்ளிட்ட 3 திரைப்படங்களை தயாரித்துள்ளார் மனோபாலா

ஆகாய கங்கை எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மனோபாலா

விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் கடைசியாக நடித்து வந்தார் மனோபாலா

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments