கரூரில் நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவ - மாணவியர் 15 பேருக்கு வாந்தி, மயக்கம்

0 7817

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட15 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

நல்லாகவுண்டம்பட்டியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளி விடுமுறை காரணமாக ஒன்றாக கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட முடிவு செய்துள்ளனர்.

அரிசிக்கு பதில் நூடுல்ஸ் மூலம் உணவு தயாரிக்க முடிவு செய்த அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த பொருட்களைக் கொண்டு சமையல் செய்துள்ளனர்.

அப்போது, ஒரு மாணவனின் வீட்டில் இருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை  நல்லெண்ணெய் என்று நினைத்து எடுத்து வந்து சமையலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதனை உட்கொண்ட 15 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments