அஜித்துக்கு ஜோடி 9 ஆம் வகுப்பு மாணவி நம்ப முடியலையா.? பாருங்க.. மே 1 ல் அமராவதி ரீ ரிலீஸ்..!

0 7974

நடிகர் அஜித்தின் முதல் தமிழ்ப்படமான அமராவதி புதிய தொழில் நுட்பத்துடன்  மே 1ந் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படும் நிலையில் அந்த படத்தில் நடித்த போது தனக்கு நேர்ந்த அனுபவங்களை நடிகை சங்கவி வீடியோவில் பகிர்ந்துள்ளார்

நடிகர் அஜித்தின் முதல் தமிழ்ப்படமான அமராவதி டால்பி டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் மே 1 ந்தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை சங்கவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 1993 ஆம் ஆண்டு தான் 9 ஆம் வகுப்பு படித்துக் முடித்த கையோடு நடிகர் அஜித்துக்கு ஜோடியாக இந்தப்படத்தில் நடித்ததாக தெரிவித்துள்ளார்

அமராவதி படத்தில் நடித்த போது தனக்கு தமிழ் தெரியாது எனவும் படத்தின் இயக்குனர் செல்வா மிகவும் சிரமப்பட்டு தன்னை நடிக்க வைத்ததாகவும் சங்கவி கூறியுள்ளார்.

ஆயிரம் படங்களில் ஏதாவது ஒரு படம் மட்டுமே புதிய தொழில் நுட்பத்துடன் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்றும் அந்தவகையில் அஜீத்துடன் தான் நடித்துள்ள அமராவதி ரீ ரிலீஸ் செய்யப்படுவது தன்னுடைய அதிர்ஷ்டம் என்றும் தெரிவித்தார் சங்கவி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments