ஆதம்பாக்கத்தில் மூதாட்டியைக் கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்த நபர் கைது..!

சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டியைக் கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார்.
இதே நபர்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர் நகரில் மூதாட்டி ஒருவரைக் கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 22ஆம் தேதி ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் வீட்டில் தனியாக இருந்த சிவகாம சுந்தரி என்ற மூதாட்டியின் கழுத்தை நெரித்துக் கொன்று 15 சவரன் நகைகள், இரண்டரை லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றார்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குடை பிடித்தபடி சென்ற நபரின் நடவடிக்கைகள் சந்தேகத்தைக் கிளப்பின. சிசிடிவியில் பதிவான முகத்தை வைத்து, கே.கே.நகரைச் சேர்ந்த சக்திவேல் என்ற அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
Comments