"12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக யாரும் எதிர்பாராத நல்ல முடிவை முதலமைச்சர் எடுப்பார்" - அமைச்சர் சேகர்பாபு
தனியார் நிறுவனங்களில் 12மணி நேர வேலையை அனுமதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா விவகாரத்தில், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரின் ஆலோசனைப்படி, 12 மணி நேர வேலை மசோதா விவகாரத்தில் அமைச்சர்கள் நாளை ஆலோசனை நடத்த இருப்பதாகவும், இதில் சுமூக முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Comments