மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம் செய்த சட்டக்கல்லூரி மாணவிகள் கைது..!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசைக் கண்டித்து துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததை கண்டித்த பாஜக பெண் நிர்வாகியை செருப்பால் தாக்கி, தர்ணாவில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவிகள் கைது செய்யப்பட்டனர்.
திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவிகள் நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் மத்திய அரசை கண்டித்து தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று பிரசுரங்களை விநியோகித்த மாணவிகளிடமிருந்து, பாஜகவினர் அவற்றை பறிமுதல் செய்ததையடுத்து, அதில் ஒரு மாணவி பிரதமர், முதலமைச்சர், காவல்துறையினர் என அனைவரையும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானதையடுத்து, அதில் ஒரு மாணவி தன் காலில் இருந்த செருப்பை கழற்றி பாஜக பெண் நிர்வாகியை அடித்து, தர்ணாவில் ஈடுபட்டதையடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் காவல்துறையினரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Comments