கோவையில் "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த நடிகர் சத்யராஜ்

கோவை வஉசி மைதானத்தில் "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" புகைப்பட கண்காட்சியை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் நடிகர் சத்யராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சத்யராஜ், முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தது முதல், மிசாவில் கைதானது, அரசியலில் படிப்படியாக வளர்ந்தது என அனைத்தும் புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளன என்றும் கோவை மக்கள் அனைவரும் கண்காட்சியை அவசியம் பார்வையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Comments