கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.. பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் - தமிழிசை

நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் சற்று அதிகரிக்கும் நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூரில், தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments