போலீசுடன் மல்லுக்கட்டிய யூடியூப் அருள்வாக்கு அம்மன் ஜெயிலில் கம்பி எண்ணுகிறார்..! இளைஞரை வசியப்படுத்தியதாக புகார்

0 2552

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் 21 வயது இளைஞரை வசியப்படுத்தி வைத்திருப்பதாக, 37 வயது பெண் சாமியார் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரித்தபோது, செல்போனில் வீடியோ எடுத்து போலீசாரை தாக்கிய சம்பவம் தொடர்பாக பெண் சாமியார், அவரது ஆதரவாளருடன் கைது செய்யப்பட்டார். மகளிர் தினத்தில் சாதனைப்பெண்மணி விருது வாங்கிய ரீல்ஸ் அருள் வாக்கு அம்மன், ரியலாக ஜெயிலுக்கு சென்ற சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..

யூடியூப் மூலம் தன்னை அருள்வாக்கு அம்மனாக அறிவித்துக் கொண்டவர் போச்சம்பள்ளி கீதா. 37 வயதான கீதா, காட்டாகரம் ஓம் சக்தி கோயிலில் சாமியாராக இருந்து வீடியோ மூலம் தனது செல்ல புள்ளைங்களுக்கு அருள் வாக்கு கூறிவந்தார்

அவரை நம்பி வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பரிசு பொருட்களை எல்லாம் சிலர் அனுப்பி வந்தனர்

தன்னை தேடி வரும் இளைஞர்களை முத்தமிட்டு அன்பை பொழிந்து தனது சிஷ்யர்களாக மாற்றுவதாக, இவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்ற 21 வயதான பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியை வசியப்படுத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக போச்சம் பள்ளி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகார் குறித்து கடந்த 6 ந்தேதி பெண் சாமியார் கீதாவையும் அந்த இளைஞரையும் அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது இருதரப்புக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் , இளைஞரின் பெற்றோருடன் சிபாரிசுக்கு வந்திருந்த பாமக பிரமுகரை , பெண் சாமியார் கீதா தாக்கியதாக கூறப்படுகின்றது

போலீசார் கட்டுப்படுத்த முயன்ற போது பெண் சாமியார் கீதாவின் ஆதரவாளரான வேல்முருகன் என்பவர் காவல் உதவி ஆய்வாளர் குமாரை தாக்கி செல்போனில் வீடியோ எடுத்ததால், அவர்களை மடக்கிப்பிடிக்க முயன்றபோது உதவி ஆய்வாளர் குமாரை பிடித்து இழுத்து கீதா மல்லுக்கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது

இருந்தாலும் தப்பி ஓட முயன்ற வேல்முருகன் என்பவரை விடாமல் மடக்கிப்பிடித்த எஸ்.ஐ குமார், அவரை காவல் நிலையத்துக்குள் அழைத்துச்சென்றார்.

புகார் கொடுத்தவர்களையும் தாக்குகிறார், போலீசாரையும் தாக்குகிறார் எனவே சாமியார் கீதாவையும் கைது செய்ய வேண்டும் என்று பா.ம.க பிரமுகர் மனைவி போலீசாருடன் ஆவேசமாக வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

இதையடுத்து உதவி காவல் ஆய்வாளரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்து , பெண் சாமியார் கீதா , சிஷ்யர் வேல்முருகன்ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்சென்றபோது, இந்து அமைப்பு நிர்வாகி அசோக் ஜி என்பவர், குறுக்கே இந்த கவுசிக் வந்தால்.. என்று போலீசாரை மறித்து போராட்டம் செய்தார்

அவரது மிரட்டலுக்கு அஞ்சாத போலீசார், கைது செய்யப்பட்ட யூடியூப் பெண் சாமியார் கீதாவையும் , வேல்முருகனையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஊரார் கஷ்டத்தை எல்லாம் போக்குவதாக யூடியூப்பில் அருள் வாக்கு என்ற பெயரில் பீலா விட்ட கீதா தற்போது சேலம் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் கடந்த 5ந்தேதி இந்த அருள் வாக்கு அம்மன் கீதாவை, அழைத்து சாதனை பெண்மணி என்று கூறி ஒரு அமைப்பு விருது வழங்கிய வினோத கூத்து ஒன்றும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments