துருக்கி-சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு நடுவில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தை மீட்பு..!

0 1559
துருக்கி-சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு நடுவில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தை மீட்பு..!

துருக்கியின் ஹடேயில் இடிபாடுகளில் இருந்து புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

துருக்கி - சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இரு நாடுகளிலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி இரவு-பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட துருக்கியின் ஹடே மாகாணத்தில் இடிபாடுகளிலிருந்து பச்சிளம் குழந்தையை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments