தரைக்கிணற்றில் தலைகீழாக விழுந்த JCB இயந்திரம்.. சிமெண்ட்டை இறக்க வந்தவர் உயிரிழப்பு..!

0 2107

சேலம் ஏற்காட்டில் ஜேசிபி இயந்திரம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தரைக்கிணற்றில் விழுந்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். ஜேசிபி இயந்திரத்தை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மாரமங்கலம் நடுநிலைப்பள்ளியில் கழிப்பறை கட்டுவதற்கான பணிகளுக்கு, ஜேசிபி இயந்திரம் மூலம் சிமெண்ட் கொண்டு வரப்பட்டுள்ளது.

பள்ளிக்கு அருகே செல்லும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜேசிபி இயந்திரம், அருகில் இருந்த தரைக்கிணற்றுக்குள் விழுந்த நிலையில், சிமெண்ட்டை இறக்குவதற்காக அதில் வந்த கரியமலை என்ற முதியவரும் கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

கிணற்றுக்குள் விழுந்த கரியமலை மீது ஜேசிபி இயந்திரம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயங்களுடன் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஜேசிபி ஓட்டுநர் சதீஷ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments