தொழில் அதிபர் எம்.ஜி.எம். மாறன் சொத்துக்கள் முடக்கம்..!

சென்னையை சேர்ந்த தொழில் அதிபரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவருமான எம்.ஜி.எம் மாறனுக்கு சொந்தமான சுமார் 205.36 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கபட்டு இருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
மாறன் கடந்த 2005- 2006 மற்றும் 2006 -2007-ம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் உள்ள இரு நிறுவனங்களில் 5 கோடியே 29 லட்சத்து 86 ஆயிரத்து 250 சிங்கப்பூர் டாலர்களை ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் முதலீடு செய்துள்ளார்.
இதையடுத்து சுமார் 205.36 கோடி மதிப்புள்ள அவரது சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும் முடக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.ஜி.எம் மாறன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மாறன் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
Comments