நட்சத்திர விடுதியில் கிறிஸ்துமஸ் தாத்தா இனிப்பு வழங்கி ஆதரவற்ற குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆதரவற்ற குழந்தைகள் நட்சத்திர விடுதிக்கு அழைத்து வரப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது.
வேளாங்கண்ணி (ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.இதன் ஒருபகுதியாக அங்குள்ள) நட்சத்திர விடுதிக்கு பூவைத்தேடி கிராமத்தில் உள்ள ஆதரவற்ற சிறார்கள் அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுடன் பெற்றோருடன் விடுதியில் தங்கியிருந்த குழந்தைகள் இணைந்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.
வண்ணவிளக்குகளின ஒளி வெள்ளத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா இனிப்புகள் வழங்க, பாடல்களை பாடி விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.
Comments