நாளை மாலை தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

0 2748

பிரதமர் மோடி நாளை கர்நாடகா வழியாக தமிழகம் வருகிறார்.

காலை 10.30 மணியளவில் கே.எஸ்.ஆர். ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ள பிரதமர், தொடர்ந்து பாரத் கௌரவ் காசி தரிசன சிறப்பு ரயிலையும் தொடங்கி வைக்கிறார்.

பின்னர் 11.30 மணியளவில் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டாவது முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

பிற்பகலில் தமிழகம் வரும் பிரதமர், 3.30 மணியளவில் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.12ம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments